திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை – ஒருவர் கைது

திருவண்ணாமலைக்கு கிரிவலம் வந்த இளம்பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலைக்கு இளம்பெண் ஒருவர் கிரிவலம் வந்துள்ளார். அப்போது, அங்கு வந்த நபர் ஒருவர் அந்த இளம்பெண்ணிடம் இருந்த நகையைப் பறித்துக் கொண்டு, அவருக்கு பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பெயரில் நடவடிக்கை எடுத்த காவல்துறையினர், பெண்ணிடம் நகையைப் பறித்து பாலியல் தொல்லை கொடுத்த வாசுதேவன் என்பவரைக் கைது செய்துள்ளனர். மேலும், இது தொடர்பாக 7 பேரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Post

Latest News