இனி ஈஸியா வீடியோ எடிட் செய்யலாம் – ஜெமினி ஆப் பயனர்களுக்கு புதிய வசதி

கூகுள் நிறுவனத்தின் ஜெமினி ஆப் பயன்படுத்தும் இந்திய பயனர்களுக்கு ஒரு சூப்பரான புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. இனி பயனர்கள் தங்களது வீடியோக்களை எடிட் செய்வதற்கு எடிட்டிங் சாஃப்ட்வேர்களை தேட வேண்டியதில்லை.

கூகுளின் அதிநவீன Omni AI மாடல் தொழில்நுட்பம் மூலம், ஜெமினி செயலிலேயே வீடியோக்களை மிக எளிதாக எடிட் செய்து கொள்ள முடியும். இதன் மூலம் வீடியோ எடிட்டிங் செய்யத் தெரியாதவர்கள் கூட இனி மிக நேர்த்தியாக வீடியோக்களை உருவாக்க முடியும்

இதன் முக்கிய அம்சங்கள் என்ன?

பயனர்கள் தங்களுக்கு தேவையான எடிட்டிங்கை சாதாரண வார்த்தைகளில் டைப் செய்தாலே போதும். இந்த ஏஐ மாடல் வீடியோவை அதற்கு ஏற்றவாறு எடிட் செய்து கொடுத்துவிடும்.

வீடியோக்களை கட் செய்வது, தேவையில்லாத பகுதிகளை நீக்குவது, பில்டர்களை சேர்ப்பது போன்ற வேலைகளை இந்த ஏஐ சில நொடிக்ளிலேயே செய்து முடித்துவிடும். இந்த புதிய அம்சம் தற்போது இந்தியாவில் உள்ள ஜெமினி ஆப் பயனர்களுக்கு முழுமையாகக் கிடைக்கிறது.

Related Post

Latest News