தாய்லாந்தில் போதைப்பொருள் குற்றவாளியை பிடிக்க ஆண் போலீசார் பெண்கள் போல வேடமிட்டு ரகசிய நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
தாய்லாந்தின் லோப் புரி மாகாணத்தில் உள்ள தா லுவாங் பகுதியில் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத சூதாட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை பிடிக்க போலீசார் திட்டமிட்டனர். இதற்காக போலீசார் பெண் நடனக் கலைஞர்கள் போல வேடமிட்டு குற்றவாளியை கைது செய்தனர்.
இதையும் படிங்க : வேலை செய்தபோது நேர்ந்த துயரம்.. பலாப்பழம் தலையில் விழுந்து பெண் உயிரிழப்பு
அவரிடமிருந்து 53 மெத்தாம்பெட்டமின் மாத்திரைகள், செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் தற்போது போலீஸ் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
தாய்லாந்து போலீசார் இதற்கு முன்பும் பல வித்தியாசமான வேடங்களில் குற்றவாளிகளை பிடித்துள்ளனர். புத்தாண்டு திருவிழாவின் போது சிங்க நடனக் குழுவாக வேடமிட்டு திருடனை கைது செய்த சம்பவமும் உலகளவில் கவனம் பெற்றது.
இது போன்ற செயல்கள் சமூக வலைதளங்களில் நகைச்சுவையாக பேசப்பட்டாலும், பல முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய உதவியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
