மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் பணியாற்றியவர்களுக்கு மாற்றுப்பணி.. முதல்வர் விஜய் அதிரடி

தமிழக முதல்வர் விஜய் கல்வி அலுவலங்கள், கோயில்கள் அருகே இருக்கும் 717 டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவிட்டு இருந்தார். இந்த நடவடிக்கையால் ஆயிரக்கணக்கான டாஸ்மாக் ஊழியர்களின் வேலை நிலை குறித்து கவலை எழுந்தது. பல்வேறு மாவட்டங்களில் பணியாளர்கள் மாற்றுப்பணி வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மூடப்பட்ட கடைகளில் பணியாற்றியவர்களின் பணிமூப்பு அடிப்படையில் பட்டியல் தயாரித்து, அருகிலுள்ள மதுபான விற்பனை நிலையங்களில் காலிப்பணியிடங்களுக்கு மாற்றுப்பணி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், அதிக விற்பனை நடைபெறும் கடைகளில் கூடுதல் பணியாளர்களாக நியமனம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதோடு, மீதமுள்ள ஊழியர்களுக்கு டாஸ்மாக் கிடங்குகள் மற்றும் மாவட்ட அலுவலகங்களில் பணியமர்த்த நடவடிக்கை எடுக்க மாவட்ட மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Post

Latest News