மின் கட்டணம் செலுத்துதல், புதிய மின் இணைப்பு விண்ணப்பம் உள்ளிட்ட சேவைகள் மே 23 நள்ளிரவு முதல் மே 24 நள்ளிரவு வரை இயங்காது என தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. பணிகள் முடிந்தவுடன் அனைத்து சேவைகளும் மீண்டும் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் சில இணைய சேவைகள் தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகளுக்காக இரண்டு நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றன. மின் கட்டணம் செலுத்துதல் மற்றும் புதிய மின் இணைப்பு விண்ணப்ப சேவைகள் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மண்டலங்களின் சில பகுதிகளில் இணைய வழி மற்றும் நேரடி மின் சேவைகள் தற்காலிகமாக செயல்படாது.
அடையார், ஐ.டி வழித்தடம், தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லூர், கே.கே.நகர், போரூர், கிண்டி, அண்ணாநகர், அம்பத்தூர் மற்றும் ஆவடி பகுதிகளைச் சேர்ந்த மின்நுகர்வோர் இந்த பாதிப்பை சந்திக்க உள்ளனர்.
