தி.மு.க. எம்.எல்.ஏ. சேகர் பாபு மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. த.வெ.க. வேட்பாளர் சினோரா அசோக் அளித்த புகாரின் பேரில் நான்கு பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தலின் போது, வாக்குப்பதிவு நடைபெற்று கொண்டிருந்த நேரத்தில், த.வெ.க. சார்பில் போட்டியிட்ட சினோரா அசோக் மற்றும் தி.மு.க. ஆதரவாளர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வாக்குச்சாவடி வெளியே இரு தரப்பினரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதால் அப்பகுதியில் சில நேரம் பரபரப்பு நிலவியது.
இதனைத் தொடர்ந்து வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வ புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் தி.மு.க. எம்.எல்.ஏ. சேகர் பாபு மீது சட்டவிரோதமாகக் கூடுதல், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல், மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
