சிங்கப்பூர் நாட்டில் விற்பனையை தொடங்கிய போட் நிறுவனம்

இந்தியாவில் தயாரிக்கப்படும் மின்னணு ஒலி சாதனங்களுக்கு பெயர் பெற்ற boAt நிறுவனம், தற்போது சிங்கப்பூர் நாட்டில் தனது விற்பனையை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. மேலும், சிங்கப்பூர் வாடிக்கையாளர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப இணையவழி விற்பனை தளங்களிலும் இந்த சாதனங்கள் கிடைக்க செய்யப்பட்டுள்ளது

முன்னதாக மலேசியாவில் தனது தயாரிப்புகளை அறிமுகப்படுத்திய நிறுவனம் அங்கு நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து தொழில்நுட்ப பயன்பாடு அதிகமுள்ள சிங்கப்பூர் சந்தையிலும் இப்போது தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.

இது குறித்து நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கௌரவ் நய்யார் கூறுகையில், “தென்கிழக்காசிய சந்தை எங்கள் வளர்ச்சியில் முக்கிய இடம் பெறுகிறது. சிங்கப்பூர் சந்தை மூலம் உலகளாவிய நிறுவனமாக மேலும் வலுப்பெறும்” என்று தெரிவித்துள்ளார்.

Related Post

Latest News