கேரளாவில் உற்பத்திச் செலவுகள் அதிகரிப்பால் ஜூன் 1 முதல் பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தப்படுகிறது. இந்த அறிவிப்பை கேரள கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (மில்மா) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
நீண்ட காலமாகப் பால் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில், தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலைகளைக் கணக்கில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மில்மா தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : தவெக அரசின் புதிய அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு!
இந்த விலை உயர்வு சாதாரண பொதுமக்களின் மாதாந்திரச் செலவில் சிறு தாக்கத்தை ஏற்படுத்தினாலும், கிராமப்புறப் பொருளாதாரத்திற்குப் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
