எலக்ட்ரிக் ஸ்கூட்டர் vs எலக்ட்ரிக் பைக் : எதை வாங்குவது நல்லது?

தற்போது பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. மேலும் உயரும் அபாயம் இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் மின்சார வாகனங்களின் (இவி) பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மின்சார வாகனம் வாங்க நினைப்பவர்கள் எதிர்கொள்ளும் முதல் குழப்பம், “ஸ்கூட்டர் வாங்கலாமா அல்லது பைக் வாங்கலாமா?” என்பதுதான். இரண்டுமே பேட்டரி மூலம் இயங்கினாலும், அவற்றின் வடிவமைப்பு, செயல்திறன் மற்றும் பயன்பாட்டில் ஏகப்பட்ட வித்தியாசங்கள் உள்ளன.

மின்சார ஸ்கூட்டர்கள்

ஓலா, ஏதர், டிவிஎஸ் ஐக்யூப் போன்ற ஸ்கூட்டர்கள் நகரத்திற்குள் அன்றாடப் பயன்பாட்டிற்கும், சிறிய வேலைகளுக்கும் ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. பெண்கள், முதியவர்கள் என குடும்பத்தில் உள்ள அனைவரும் எளிதாக ஓட்டும் வகையில் இவை மிக எளிமையாக இருக்கின்றன.

மின்சார பைக்குகள்

அல்ட்ராவயலட், ரிவோல்ட் போன்ற மின்சார பைக்குகள் ஸ்போர்ட்டியான தோற்றத்துடன், சற்று கனமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இளைஞர்களைப் பெரிதும் ஈர்க்கும் வகையில் இருக்கும் இவை, நீண்ட தூரப் பயணங்களுக்குப் பயன்படுத்த உகந்தவை.

செயல்திறன் மற்றும் வேகம்

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

மணிக்கு 80 முதல் 100 கிலோமீட்டர் வரை செல்லும். ஒரு முழு சார்ஜிற்கு 80 முதல் 150 கிலோமீட்டர் வரை செல்லும். நகரப் போக்குவரத்திற்கு ஏற்றது.

எலக்ட்ரிக் பைக்

மணிக்கு 100 முதல் 150 கிலோமீட்டர் வரை செல்லும். நீண்ட தூர நெடுஞ்சாலைப் பயணங்களுக்கு உகந்தது. 10 முதல் 20 கிலோவாட் வரையிலான சக்திவாய்ந்த மோட்டார் உள்ளது.

எதை தேர்வு செய்யலாம்?

உங்களது தினசரி பயணம் 30 முதல் 50 கிலோமீட்டருக்குள் இருந்தால், குறைந்த பட்ஜெட்டில் குடும்பத்தினர் அனைவரும் பயன்படுத்தக்கூடிய வாகனம் தேவைப்பட்டால், நீங்கள் ஸ்கூட்டரைத் தேர்வு செய்யலாம்.

உங்களுக்கு வேகம், அதிக சக்தி மற்றும் அடிக்கடி நெடுஞ்சாலைகளில் நீண்ட தூரம் பயணிக்கும் ஆர்வம் இருந்தால், எலக்ட்ரிக் பைக் சிறந்த தேர்வாக இருக்கும்.

Related Post

Latest News