அரக்கோணம் – செங்கல்பட்டு இடையே ரூ.933 கோடியில் இரட்டை ரெயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் பல ரயில்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செங்கல்பட்டு முதல் அரக்கோணம் வரை உள்ள ரெயில் பாதையை இரட்டை வழிப்பாதையாக மாற்றும் முக்கிய திட்டத்திற்கு ரெயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதையும் படிங்க : சென்னை கடற்கரை – செங்கல்பட்டு ரயில் சேவையில் மாற்றம்
தற்போது இந்த பாதையில் ஒற்றை ரெயில் வழித்தடம் மட்டுமே இருப்பதால், எதிரே வரும் ரெயில்களுக்கு வழிவிட பல நிலையங்களில் ரெயில்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக பாலூர், வாலாஜாபாத், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி தாமதம் ஏற்படுகிறது.
இதனை சரி செய்ய சுமார் ரூ.933 கோடி மதிப்பில் அரக்கோணம் – செங்கல்பட்டு இடையிலான 68 கிலோமீட்டர் தூரத்திற்கு இரட்டை ரெயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால், தற்போது தினமும் இயக்கப்படும் 13 ரெயில்களுக்கு பதிலாக 40 ரெயில்கள் வரை இயக்கும் வசதி உருவாகும். மேலும் பயண நேரம் குறைவதுடன், ரெயில் போக்குவரத்தும் வேகமாகும் என்று கூறப்படுகிறது.
