பயணிகள் கவனத்திற்கு..! சென்னை கடற்கரை – செங்கல்பட்டு ரயில் சேவையில் மாற்றம்

காட்டாங்குளத்தூர் ரயில் நிலையத்தில் மே 19 முதல் மே 21 வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையேயான மின்சார ரயில்கள் கூடுவாஞ்சேரி மற்றும் தாம்பரத்துடன் பகுதியாக நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் – விழுப்புரம் ரயில் பாதையில் உள்ள காட்டாங்குளத்தூர் ரயில் நிலையப் பணிமனையில் தண்டவாளப் பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் காரணமாக, மே 19-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் மே 21-ஆம் தேதி வியாழக்கிழமை வரை சென்னை கடற்கரை மற்றும் செங்கல்பட்டு இடையேயான புறநகர் மின்சார ரயில் சேவைகளில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை கடற்கரையிலிருந்து காலை 10.56, 11.40 மணி, பிற்பகல் 12.28 மணி ஆகிய நேரங்களில் புறப்பட்டு செங்கல்பட்டு செல்லவேண்டிய புறநகா் மின்சார ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தப்படும்.

சென்னை கடற்கரையிலிருந்து பிற்பகல் 12.40 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லவேண்டிய இமு ரயில் தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.

செங்கல்பட்டிலிருந்து பிற்பகல் 12 மணி, 1.10, 1.45 மற்றும் 2.20 ஆகிய மணிகளில் கடற்கரைக்கு புறப்பட வேண்டிய மெமு ரயில்கள் தாம்பரத்திலிருந்து புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

Latest News