இன்ஸ்டாகிராமின் புதிய “இன்ஸ்டன்ட்ஸ்” அம்சத்தை மறைப்பது எப்படி?

இன்ஸ்டாகிராமின் புதிய “இன்ஸ்டன்ட்ஸ்” அம்சம் தனியுரிமை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. புகைப்படங்கள் நேரடியாக அனுப்பப்படுவதால் பயனர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் செயலியில் அறிமுகமான புதிய “இன்ஸ்டன்ட்ஸ்” அம்சம் தற்போது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. புகைப்படங்களை நண்பர்களுக்கு அனுப்புவதை எளிதாக்கும் நோக்கில் அறிமுகமான இந்த வசதி, பயனர்களிடையே தனியுரிமை குறித்த அச்சத்தை உருவாக்கியுள்ளது.

இந்த அம்சம் மூலம் எடுத்த புகைப்படங்கள் நேரடியாக அனுப்பப்படுகின்றன. புகைப்படங்களை உறுதிப்படுத்தல் வசதி இதில் இல்லாததால், தவறுதலாக புகைப்படங்கள் பகிரப்படலாம் என பலர் கவலை தெரிவித்து வருகின்றனர்.

“இன்ஸ்டன்ட்ஸ்” அம்சம் ஸ்னாப்சாட் போன்ற முறையில் செயல்படுகிறது. புகைப்படம் ஒருமுறை பார்த்த பிறகு மறைந்து விடும். மேலும் திரைப் பதிவு அல்லது திரைப் படம் எடுக்க முடியாத பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

Instagram Instants-ஐ Disable செய்வது எப்படி?

Instagram app-ஐ திறக்கவும்.
கீழே இருக்கும் Profile icon-ஐ அழுத்தவும்.
மேல் வலது மூலையில் உள்ள Menu ஐ தேர்வு செய்யவும்.
Settings and Privacy சென்று திறக்கவும்.
அங்கு Instants அல்லது Instant Sharing என்ற option-ஐ தேடவும்.
அதற்குள் சென்று Turn Off Instants அல்லது Disable Instant Sharing
என்பதை OFF செய்யவும்.

Notification மட்டும் நிறுத்த

Settings and Privacy → Notifications : Instants Notifications என்பதை Off செய்யவும்

Related Post

Latest News