புதிய ஜிமெயில் பயனர்களுக்கு அதிர்ச்சி.. இலவச ஸ்டோரேஜ் குறைப்பு

புதிய ஜிமெயில் கணக்குகளை தொடங்கும் பயனர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 15GB இலவச கிளவுட் ஸ்டோரேஜ் தற்போது 5GB ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதே நேரத்தில், பயனர் தனது மொபைல் எண்ணை கூகுள் கணக்குடன் இணைத்தால் கூடுதல் கட்டணமின்றி 15GB வரை ஸ்டோரேஜ் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நபர் பல போலியான ஜிமெயில் கணக்குகளை உருவாக்கி இலவச ஸ்டோரேஜை தவறாக பயன்படுத்தி வருகின்றனர் என்றும், அதனை கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் இந்த முயற்சி எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு நபருக்கு ஒரு 15GB ஸ்டோரேஜ் என்ற கொள்கையை அமல்படுத்தும் நோக்கமே இதன் பின்னணி என தொழில்நுட்ப நிபுணர்கள் விளக்குகின்றனர்.

ஏற்கனவே 15GB ஸ்டோரேஜ் கொண்ட Google கணக்குகளை பயன்படுத்தி வரும் பயனர்களுக்கு பாதிப்பு இருக்க வாய்ப்பு குறைவு. ஆனால் புதிய கணக்குகளை உருவாக்கும் பயனர்கள் முழு ஸ்டோரேஜை பெற மொபைல் எண்ணை இணைக்க வேண்டும்.

Related Post

Latest News