பிரதமர் நரேந்திர மோடி மே 15 முதல் 20 ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே மற்றும் இத்தாலி ஆகிய 5 நாடுகளுக்கு முக்கிய வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இந்த பயணத்தின் போது ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளுடன் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 43 ஆண்டுகளுக்குப் பிறகு நார்வேக்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையும் மோடிக்கு கிடைக்கிறது.
இதையும் படிங்க : நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
இந்த பயணத்தால் இந்தியாவின் வர்த்தகம், முதலீடு மற்றும் உலகளாவிய கூட்டாண்மையை வலுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக மேற்காசியாவில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையில், இந்த விஜயம் இந்தியாவின் வெளிநாட்டு கொள்கையில் முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
