நாடு முழுவதும் மே 20-ம் தேதி மருந்துக்கடைகள் வேலைநிறுத்தம்

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு கட்டுப்பாடு கோரி மே 20 அன்று நாடு முழுவதும் மருந்தகங்கள் வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது.

ஆன்லைன் மூலம் நடைபெறும் மருந்து விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் எனக் கோரி, நாடு முழுவதும் வரும் 20-ம் தேதி மருந்தக உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் பல மாநிலங்களில் மருந்து விநியோக சேவையில் தற்காலிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இதையும் படிங்க : உலகை அச்சுறுத்தும் ஹண்டா வைரஸ் : அறிகுறிகள் என்னென்ன?

அகில இந்திய மருந்தக உரிமையாளர் மற்றும் விற்பனையாளர் சங்கம் வெளியிட்ட அறிவிப்பில், ஆன்லைன் மருந்து விற்பனை முறையாக கட்டுப்படுத்தப்படாததால் நோயாளி பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரே மருந்துச் சீட்டை பல முறை பயன்படுத்தும் வாய்ப்பு, போலி சீட்டுகள் மூலம் மருந்து வாங்கும் அபாயம் ஆகியவை அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா காலத்தில் வழங்கப்பட்ட சில தளர்வுகளை பயன்படுத்தி ஆன்லைன் நிறுவனங்கள் விதிகளை மீறுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் போராட்டம் மேலும் தீவிரப்படுத்தப்படும் எனவும் சங்கம் தெரிவித்துள்ளது.

எனினும், அவசர தேவைக்கான மருந்துகள் தடையின்றி கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Related Post

Latest News