ஃபுல்-சார்ஜ் செய்தால் 159 கிலோ மீட்டர் ஓட்டலாம்., அதுவும் குறைந்த விலையில்..!

ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இரண்டு ஆண்டுகளில் 3 லட்சம் விற்பனையை கடந்துள்ளது. குறைந்த விலை, நீண்ட ரேஞ்ச் மற்றும் மாடர்ன் வசதிகள் காரணமாக குடும்பங்களின் விருப்பமான ஸ்கூட்டராக இது மாறியுள்ளது.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஏத்தர் நிறுவனம் விற்பனையில் புதிய சாதனையை பதிவு செய்துள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், அறிமுகமான இரண்டு ஆண்டுகளுக்குள் 3 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.

2024ஆம் ஆண்டு ஏப்ரலில் ரிஸ்டா அறிமுகமானபோது, ஏத்தர் நிறுவனம் பெரும்பாலும் இளைஞர்களுக்கான பெர்ஃபார்மன்ஸ் ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனை செய்து வந்தது. ஆனால், தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற குடும்ப ஸ்கூட்டராக ரிஸ்டா வந்ததன் மூலம் புதிய வாடிக்கையாளர்கள் அதிக அளவில் ஈர்க்கப்பட்டனர்.

ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 159 கிலோமீட்டர் வரை பயணிக்கக்கூடிய இந்த ஸ்கூட்டரில், டிஎஃப்டி டிஸ்பிளே, கூகுள் மேப்ஸ் இணைப்பு, ரிவர்ஸ் மோட், மேஜிக் ட்விஸ்ட் தொழில்நுட்பம் என பல்வேறு வசதிகள் உள்ளன.

இருக்கையின் கீழ் 56 லிட்டர் மற்றும் முன்புறத்தில் 22 லிட்டர் வரை சேமிப்பு வசதி இருப்பது குடும்ப பயன்பாட்டிற்கு ஏற்றதாக மாற்றியுள்ளது. இதனால் நகர்ப்புறங்களில் மட்டுமல்லாமல், சிறிய நகரங்களிலும் ரிஸ்டாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

தற்போது ரிஸ்டாவின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.10 லட்சம் முதல் துவங்குகிறது. பேட்டரி-அஸ்-அ-சர்வீஸ் திட்டத்தின் மூலம் குறைந்த ஆரம்ப விலையிலும் இந்த ஸ்கூட்டரை வாங்கும் வசதியை ஏத்தர் நிறுவனம் வழங்கி வருகிறது.

Latest News