2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. முதல் முறையாகத் தேர்தலை சந்தித்த இந்தக் கட்சி பல இடங்களில் வெற்றி அடைந்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க : ஒரே தொகுதியில் 6 முறை வெற்றி பெற்ற எடப்பாடி பழனிசாமி
இந்த சூழலில், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்திருந்த கருத்து தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது. அவர் கூறியபடி, விஜய் தனித்து போட்டியிட்டால் பெரிய அளவில் இடங்களை கைப்பற்ற முடியும் என்று கூறியிருந்தார். தற்போது அவர் கூறியபடி நடந்துள்ளது.
இதையும் படிங்க : 2026 தேர்தலில் திமுகவின் பின்னடைவுக்கு இதுதான் காரணம்
அதே நேரத்தில், பீகார் தேர்தலில் அவரது கட்சி எதிர்கொண்ட தோல்வியை முன்வைத்து, இந்த கணிப்புகள் அனைத்தும் சரியானவை அல்ல என சிலர் விமர்சிக்கின்றனர். மொத்தத்தில், ஒரு பழைய கணிப்பும் தற்போதைய தேர்தல் சூழலும் இணைந்து, அரசியல் ஆர்வலர்களிடையே புதிய விவாதங்களை கிளப்பியுள்ளது.


