ஒரே தொகுதியில் 6 முறை வெற்றி பெற்ற எடப்பாடி பழனிசாமி

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் 1,48,933 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார்.

எடப்பாடி தொகுதியில் எடப்பாடி கே. பழனிசாமி சந்தித்த வெற்றிகள் மற்றும் தோல்விகளின் நிலவும் இதோ :

வெற்றி நிலவரம்

1989: முதல் முறையாக எடப்பாடி தொகுதியில் வெற்றி வாகை சூடினார்.

1991: தொடர்ந்து இரண்டாவது முறையாக தனது வெற்றியைத் தக்கவைத்துக் கொண்டார்.

2011, 2016 & 2021: கடந்த மூன்று சட்டமன்றத் தேர்தல்களிலும் தொடர் வெற்றிகளைப் பதிவு செய்துள்ளார்.

2026: தற்போது நடந்து முடிந்த தேர்தலிலும் 1.48 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

தோல்வி விவரங்கள்:

அவரது தேர்தல் பாதையில் இரண்டு முறை பின்னடைவுகளையும் சந்தித்துள்ளார். 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோல்வியைத் தழுவினார். அதனைத் தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு தேர்தலிலும் அவர் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

தற்போது 2026 தேர்தலில் பெற்றுள்ள இந்த வெற்றி, அவரது அரசியல் பலத்தை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் விதமாக அமைந்துள்ளது.

Latest News