ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி காலை தொடங்குகிறது. தேர்தல் ஆணையம் இணையதளம் மற்றும் செயலிகள் மூலம் நேரடி தகவல் வழங்க ஏற்பாடு செய்துள்ளது.
தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்காளம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி காலை தொடங்குகிறது. தமிழ்நாட்டில் சுமார் 85% வாக்குகள் பதிவாகியுள்ளன.
புதுச்சேரியில் 90% வாக்குப்பதிவு நடந்துள்ளது. கேரளாவில் 78% அசாமில் சுமார் 85% மேற்கு வங்காளத்தில் முதல் கட்டத்தில் 93% மற்றும் இரண்டாம் கட்டத்தில் 92% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
இதையும் படிங்க : பொதுமக்களுக்கு அதிர்ச்சி செய்தி : கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு
வருகிற திங்கட்கிழமை காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்த 5 மாநில தேர்தல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள தேர்தல் ஆணையம் பிரத்யேகமாக https://results.cci.gov.in/ என்ற இணையதள முகவரியை வெளியிட்டுள்ளது.
மக்கள் உடனுக்குடன் தகவல்களை பெறும் வகையில் ECINET மற்றும் Voter Helpline போன்ற செயலிகளும் பயன்பாட்டில் உள்ளன.


