பேஸ்புக் விளம்பரத்தை நம்பி ரூ.12 லட்சத்தை இழந்த பெண் : போலீசார் விசாரணை

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் ஒரு பெண், Facebook விளம்பரத்தை நம்பி ரூ.12.77 லட்சம் செலுத்தி ஏமாந்துள்ளார். இந்த சம்வபம் குறித்து, சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் 33 வயது பெண், ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்தார். இதற்காக அவர் Facebook தளத்தில் விளம்பரம் ஒன்றை பார்த்து அதனை நம்பியுள்ளார். இதையடுத்து ரூ.12.77 லட்சத்தை செலுத்தியுள்ளார். ஆனால், முழு தொகையும் பெற்றுக்கொண்ட பிறகு, “தொழில்நுட்ப காரணங்களால் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்து, தொடர்பை துண்டித்துள்ளனர்.

இதையும் படிங்க : திருச்சியில் நகை பட்டறை உரிமையாளரை கட்டிப்போட்டு நகைகள் கொள்ளை

பணத்தை திரும்பக் கேட்டபோது, வெறும் ரூ.1.18 லட்சம் மட்டுமே திருப்பி வழங்கப்பட்டது. மீதமுள்ள சுமார் ரூ.11.59 லட்சம் பணம் மோசடியாக பறிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், உடனடியாக சைபர் கிரைம் போலீசாரை அணுகி புகார் அளித்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்ட வங்கி கணக்குகள் மற்றும் அந்த சமூக வலைதளப் பக்கத்தின் பின்னணியை ஆராய்ந்து வருகின்றனர்.

Latest News