மகாராஷ்டிர மாநிலத்தின் அமராவதி மாவட்டம் பரத்வாடா நகரைச் சேர்ந்த 19 வயதுடைய முகமது அயாஸ் என்ற தன்வீர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இவரிடமிருந்து 350க்கும் மேற்பட்ட வீடியோக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இவர் வாட்ஸ்அப் மற்றும் ஸ்னாப்சாட் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் சுமார் 180 சிறுமிகளை காதல் வலையில் சிக்கவைத்து, பின்னர் அவர்களை மும்பை மற்றும் புனே போன்ற நகரங்களுக்கு அழைத்து சென்று ஆபாச வீடியோக்கள் எடுத்துள்ளார்.
இதையும் படியுங்கள் : பட்டாக்கத்தியில் கேக் வெட்டிய இளைஞர்.. அடுத்து நடந்த ட்விஸ்ட்
இந்த வீடியோக்களை பயன்படுத்தி, மிரட்டியுள்ளார். மேலும், அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபட கட்டாயப்படுத்தியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, அவர் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். அவரை 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதனிடையே, முகமது அயாஸ் வீட்டில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட பகுதிகள் நகராட்சி அதிகாரிகளின் நடவடிக்கையின்படி ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன.
