சென்னை தி.நகரில் உரிய அனுமதியின்றி ரோடு ஷோ நடத்தியதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மீது சென்னை மாம்பலம் போலீஸார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜய் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக, சென்னை தி.நகர் பகுதியில் அவர் வாகனத்தில் சென்றபடி தொண்டர்களைச் சந்தித்தார். அப்போது கூட்டம் அதிகரித்ததால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தேர்தல் ஆணையத்தின் நிபந்தனைகளை மீறி, அனுமதியின்றி சாலை வலம் சென்றதுடன், பொதுமக்களுக்குப் பெரும் இடையூறு ஏற்படுத்தியதாக மாம்பலம் போலீஸார் விஜய் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
