இந்தியாவில் பயன்படுத்தப்படும் எல்.பி.ஜி. எரிவாயுவின் தேவையில் சுமார் 60 சதவீதம் இறக்குமதியின் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது.
ஈரான்–இஸ்ரேல் மோதலுக்கு முன்பு, இந்த இறக்குமதியில் 90 சதவீதம் ஹார்முஸ் கடல்சந்தி வழியாகவே வந்தது. ஆனால் தற்போது அந்த கடல் பாதையில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், இறக்குமதி அளவு 55 சதவீதமாக குறைந்துள்ளது.
இதன் காரணமாக இந்தியாவின் சமையல் எரிவாயு இறக்குமதி மற்றும் அதன் விலை மீது கூடுதல் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு பார்த்தால், இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விநியோகம் முழுமையாக சீராக நிலைநிறுத்தப்படுவதற்கு 3 முதல் 4 ஆண்டுகள் வரை ஆகலாம் என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
