பட்டாக்கத்தியில் கேக் வெட்டிய இளைஞர்.. அடுத்து நடந்த ட்விஸ்ட்

திருச்சி மாவட்டம, மணப்பாறை அருகிலுள்ள வளநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சில இளைஞர்கள் பட்டாக்கத்தி வைத்து பிறந்தநாளை கொண்டாடினர். அவர்கள் கேக் வெட்டும் போது பட்டாக்கத்தியை பயன்படுத்தி, பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வீடியோ (ரீல்ஸ்) எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.

இந்த வீடியோ பரவியதையடுத்து, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் வளநாடு போலீசார் சம்பந்தப்பட்ட இளைஞர்களை கைது செய்தனர்.

மேலும், கைது செய்யப்பட்ட இளைஞர்கள் இனிமேல் இத்தகைய செயல்களில் ஈடுபடமாட்டோம் என்று வருத்தம் தெரிவிக்கும் வீடியோவையும் போலீசார் வெளியிட்டுள்ளனர்.

RELATED NEWS

Latest News