சென்னை எழும்பூர்–தஞ்சாவூர் உழவன் எக்ஸ்பிரஸ் (16865/16866) மற்றும் சென்னை எழும்பூர்–மங்களூரு சென்டிரல் எக்ஸ்பிரஸ் (16159/16160) ஆகிய இரண்டு ரெயில்களும் பரிசோதனை அடிப்படையில் மார்ச் 16 முதல் திண்டிவனம் ரெயில் நிலையத்தில் நிறுத்தம் அளிக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து தஞ்சாவூர் நோக்கி செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் திண்டிவனம் நிலையத்தை நள்ளிரவு 12.13 மணிக்கு அடைந்து, 12.15 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் இந்த ரெயில் அதிகாலை 2.13 மணிக்கு திண்டிவனம் வந்து, 2.15 மணிக்கு அங்கிருந்து புறப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதேபோல், சென்னை எழும்பூர்–மங்களூரு சென்டிரல் எக்ஸ்பிரஸ் திண்டிவனத்தை நள்ளிரவு 12.58 மணிக்கு வந்து, 1.00 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் இந்த ரெயில் 1.15 மணிக்கு வந்து, 1.17 மணிக்கு புறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
