ஈரான் மீதான தாக்குதல்கள் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து இடையூறுகள் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் முதல் சமையல் எண்ணெய் வரை அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் தாறுமாறாக எகிறியுள்ளது.
சூரியகாந்தி எண்ணெய் ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்தும், பாமாயில் இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் இருந்தும், சோயா எண்ணெய் அர்ஜென்டினா போன்ற நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படுகின்றன.
போர் சூழலால் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, காப்பீட்டுத் தொகை மற்றும் சரக்குக் கட்டணங்கள் அதிகரித்துள்ளதால், உள்நாட்டுச் சந்தையில் கடந்த சில நாட்களில் மட்டும் சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு 20 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
