பீகாரின் லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள அசோக் தாம் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் திரண்ட நிலையில் அங்கு கூட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
அசோக் தாம் கோயிலில் பரபரப்பு
பீகார் மாநிலம் லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள அசோக் தாம் கோயிலில் ஆகஸ்ட் 17-ம் தேதி, சாவன் மாதத்தின் மூன்றாவது திங்கட்கிழமையை முன்னிட்டு அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். இதனால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
இரண்டு ரயில்களில் வந்த கூட்டம்
காலை சுமார் 6.30 மணி முதல் 6.45 மணிக்குள் இரண்டு ரயில்களில் பக்தர்கள் வந்ததால் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கூட்டத்தைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தபோதிலும், அங்கு அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் கூட்டம் காரணமாக உடைந்ததாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
தடுப்பு உடைந்ததும் மக்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்ததால் நிலைமை கட்டுக்கடங்காமல் போனதாகவும், உடனடியாக 15 பேர் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டதாகவும் அவர் கூறினார். நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலும் விவரங்கள் பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
