தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் 68 லட்சம் சைபர் தாக்குதல் : முறியடித்த தேர்தல் ஆணையம்

வாக்கு எண்ணிக்கை நாளில், தேர்தல் ஆணையத்தின் ECINET இணைய தளம் மற்றும் செயலியை குறிவைத்து பெரிய அளவில் சைபர் தாக்குதல் முயற்சிகள் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு, மேற்கு வங்காளம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் மே 4ம் தேதி வெளியிடப்பட்டது. தேர்தல் முடிவுகளை பொதுமக்கள் நேரடியாக அறிந்து கொள்ள ECINET இணையதளம் மற்றும் மொபைல் செயலி பயன்படுத்தப்பட்டது. குறிவைத்து பெரிய அளவில் சைபர் தாக்குதல் முயற்சிகள் நடந்துள்ளது.

இதையும் படிங்க : தி.மு.க. ஆதரவுடன் ஆட்சியமைக்க அ.தி.மு.க. தீவிரம் : உச்சகட்ட பரபரப்பில் தமிழக அரசியல்

இது குறித்து, இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற போது ECINET தளத்திற்கு எதிராக சுமார் 68 லட்சம் தீங்கிழைக்கும் இணையத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இத்தாக்குதல்கள் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இருந்து வந்ததாக கூறப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை நாளில் மட்டும் ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 3 கோடி ஹிட்ஸ் வரை இந்த தளத்திற்கு வந்துள்ளன. அதேபோல், வாக்குப்பதிவு நடைபெற்ற ஏப்ரல் 9, 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மட்டும் 98.3 கோடி ஹிட்ஸ்கள் பதிவாகியுள்ளன.

ECINET தளத்தில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அமைப்புகள் காரணமாக இந்த தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Related Post

Latest News