ஈரானில் போரின்போது வீசப்பட்டு வெடிக்காமல் இருந்த குண்டு தற்போது வெடித்து 14 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர்.
கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலில் பல பகுதிகள் பாதிக்கப்பட்டன. இந்த தாக்குதல்களின் பின்னர் நிலைமை தீவிரமடைந்ததால், மார்ச் 7ஆம் தேதி முதல் தற்காலிக போர்நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது.
தாக்குதலின்போது வீசப்பட்ட சில வெடிகுண்டுகள் வெடிக்காமல் நிலத்திற்குள் புதைந்து கிடந்துள்ளது. இவற்றை கண்டறிந்து ஈரான் பாதுகாப்புப்படை வீரர்கள் செயலிழக்கச் செய்து வருகின்றனர். அப்போது திடீரென குண்டு வெடித்ததில் 14 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர்.
போரின்போது வீசப்பட்டு வெடிக்காமல் இருந்த குண்டுகளில் ஒன்று தற்போது வெடித்ததே இந்த விபத்திற்கான காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது, போரின் முடிவுக்குப் பிறகும் நிலத்தில் புதைந்திருக்கும் ஆயுதங்கள் எவ்வளவு பெரிய அபாயத்தை உருவாக்குகின்றன என்பதை வெளிப்படுத்துகிறது.


