தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, இப்போது தவெகவும் காங்கிரஸும் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை அமைத்துள்ளது. தவெகவிற்கு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ள நிலையில் அதற்கான காரணத்தை சிவகங்கை காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் விளக்கியுள்ளார்.
இது தொடர்பாக, காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கூறியதாவது : கூட்டணி அமைப்பது தொடர்பாக முதலில் தவெகவிடம் இருந்து எங்களுக்குக் கோரிக்கை வந்தது. காங்கிரஸ் கட்சியின் அனைத்து நிலைகளிலும் முறையான ஆலோசனைகள் நடத்தப்பட்ட பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டது என கூறியுள்ளார்.
மேலும், அவர் கூறுகையில், தேர்தலில் தனித்தனியாகப் போட்டியிட்ட கட்சிகள், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஒருமித்த கருத்துள்ள கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைப்பது அரசியலில் சாதாரணமான ஒன்று. த.வெ.க ஒரு மதச்சார்பற்ற கூட்டணியை உருவாக்க விரும்புவதில் தெளிவாக உள்ளது. அவர்களின் அந்த முயற்சிக்குக் காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கிறது என கூறியுள்ளார்.


