தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியீடு

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு மே 4ம் தேதி முடிவுகள் வெளியாகிறது. தமிழக வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு இந்த முறை 85.10 சதவீத வாக்குகள் பதிவாகின.

இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது.

பீப்பிள்ஸ் பல்ஸ் (People’s Pulse) நிறுவனம் நடத்திய இந்த சர்வேயின்படி

திமுக கூட்டணி (தி.மு.க+) 125 முதல் 145 தொகுதிகள் வரை வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.

அதிமுக கூட்டணி (அ.தி.மு.க+) 65 முதல் 80 தொகுதிகள் வரை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

தவெக (TVK) கட்சி 18 முதல் 24 இடங்கள் வரை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் 2 முதல் 6 இடங்கள் வரை பெறலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

“சாணக்கியா ஸ்ட்ராடஜீஸ்” (Chanakya Strategies) நிறுவனம் நடத்திய இந்த சர்வேயில்,

திமுக கூட்டணி (தி.மு.க+) 145 முதல் 160 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணி (அ.தி.மு.க+) 50 முதல் 65 இடங்கள் வரை பெறும் வாய்ப்பு உள்ளது.

தவெக (TVK) கட்சி 13 முதல் 18 தொகுதிகள் வரை பெறும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பிற கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் 5 முதல் 8 இடங்கள் வரை பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

ஜேவிசி நிறுவனம் வெளியிட்ட கருத்து கணிப்பு முடிவுகள்

திமுக கூட்டணி – 75 முதல் 95 தொகுதிகளில் வெற்றி

அதிமுக கூட்டணி – 128 முதல் 147 தொகுதிகளில் வெற்றி

தவெக – 8 முதல் 15 தொகுதிகளில் வெற்றி

மற்றவை – 0

ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் வெளியிட்ட கருத்து கணிப்பு முடிவுகள்

திமுக கூட்டணி – 92 முதல் 110 தொகுதிகளில் வெற்றி

அதிமுக கூடணி – 22 முதல் 32 தொகுதிகளில் வெற்றி

தவெக – 98 முதல் 120 தொகுதிகளில் வெற்றி

மற்றவை – 0

மெட்ரிஸ் நிறுவனம் வெளியிட்ட கருத்து கணிப்பு முடிவுகள்

திமுக கூட்டணி – 122 முதல் 132 தொகுதிகளில் வெற்றி

அதிமுக கூட்டணி – 87 முதல் 110 தொகுதிகளில் வெற்றி

தவெக – 10 முதல் 12 தொகுதிகளில் வெற்றி

மற்றவரை – 0 முதல் 6 தொகுதிகளில் வெற்றி

பி-மார்கியூ நிறுவனம் வெளியிட்ட கருத்து கணிப்பு முடிவுகள்

திமுக கூட்டணி – 125 முதல் 145 தொகுதிகளில் வெற்றி

அதிமுக கூட்டணி – 65 முதல் 85 தொகுதிகளில் வெற்றி

தவெக – 16 முதல் 26 தொகுதிகளில் வெற்றி

மற்றவை – 1 முதல் 6 தொகுதிகளில் வெற்றி

பீப்பிள்ஸ் இன்சைட் நிறுவனம் வெளியிட்ட கருத்து கணிப்பு முடிவுகள்

திமுக கூட்டணி – 120 முதல் 140 தொகுதிகளில் வெற்றி

அதிமுக கூட்டணி – 60 முதல் 70 தொகுதிகளில் வெற்றி

தவெக – 30 முதல் 40 தொகுதிகளில் வெற்றி

மற்றவை – 0 முதல் 4 தொகுதிகளில் வெற்றி

கமஹ்யா அனாலிட்டிக்ஸ் நிறுவனம் வெளியிட்ட கருத்து கணிப்பு முடிவுகள்

திமுக கூட்டணி – 78 முதல் 95 தொகுதிகளில் வெற்றி

அதிமுக கூட்டணி – 68 முதல் 84 தொகுதிகளில் வெற்றி

தவெக – 67 முதல் 81 தொகுதிகளில் வெற்றி

மற்றவை – 0

Latest News