சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவுள்ள ‘தலைவர் 173’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ரஜினிகாந்தின் 173-வது திரைப்படத்திற்கு ‘தர்மன்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிக்கிறார். ‘டிராகன்’ பட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இப்படத்தை இயக்கவுள்ளார்.
ரஜினிகாந்தின் 173-வது திரைப்படத்தை முதலில் சுந்தர் சி அல்லது சிபி சக்கரவர்த்தி இயக்குவதாகப் பல தகவல்கள் வெளியாகி வந்தன. பல்வேறு மாற்றங்களுக்குப் பிறகு, தற்போது இப்படத்தை இளம் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கவுள்ளார் என்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : பிரபல நடிகர் வீட்டில் ரூ.10 லட்சம் வைர நெக்லஸ் திருட்டு
விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், தனது பேச்சுகள் ஊடகங்களில் விவாதப் பொருளாவது குறித்து பேசினார். “மேடையில் பேச அழைக்கிறார்கள் என்றாலே எனக்கு இப்போது தயக்கமாக இருக்கிறது. ஏனென்றால் நான் பேசினாலே அது பெரிய Problem ஆகிவிடுகிறது. எனக்கும் பிரச்சனை, அதை கேட்பவர்களுக்கும் பிரச்சனை. எதையாவது ஒரு சர்ச்சையைக் கிளப்பிக்கொண்டே இருக்கிறார்கள்.
சரி, நாம் பேசாமல் சும்மா இருக்கலாம் என்று நினைத்தால், ‘இவர் ஏன் பேச மாட்டேங்கிறார்? வாயில் கொழுக்கட்டை வைத்திருக்கிறாரா?’ என கிண்டல் செய்கிறார்கள். சரி என்று மேடையில் வந்து பேசினால், ‘இவர் ஏன் இப்போது பேசுகிறார்’ என்றும், ‘இவர் இப்படிப் பேசியிருக்கக் கூடாது’ என்றும் விமர்சிக்கிறார்கள்.”
தொடர்ந்து பேசிய அவர், “நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் ஒரு உண்ம தெரிந்துக் கொண்டேன். நம்மைப் பிடிக்காதவர்களுக்கு நாம் என்ன செய்தாலும், எப்படிப் பேசினாலும் பிடிக்கப் போவதில்லை. அதேபோல, நம்மைப் பிடித்தவர்களுக்கு நாம் என்ன செய்தாலும் பிடிக்கும் என்று நினைப்பதும் முட்டாள்தனம். அதனால் நாம் தான் எப்போதும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்” என பேசியுள்ளார்.
