‘We The Leaders’ அமைப்பின் முதல் மாநாடு எப்போது? – அண்ணாமலை அறிவிப்பு

பா.ஜ.க.வில் இருந்து விலகிய அண்ணாமலை, புதிய அரசியல் இயக்கமான ‘We The Leaders’-ஐ தொடங்கியுள்ளார். அதன் முதல் மாநில மாநாடு ஜூலை 12-ஆம் தேதி பொள்ளாச்சியில் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, தமிழக அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் பா.ஜ.க.வில் இருந்து விலகிய அண்ணாமலை, சில நாட்களுக்குப் பிறகு சமூக வலைதள நேரலையின் மூலம் மக்களிடம் உரையாற்றினார். அப்போது ‘We The Leaders’ என்ற புதிய இயக்கத்தை தொடங்குவதாக அறிவித்தார். மேலும், இந்த இயக்கத்தை அடுத்த கட்டத்தில் அரசியல் கட்சியாக மாற்றும் நோக்கத்துடன் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

அண்ணாமலை வெளியிட்ட தகவலின்படி, இயக்கம் அறிவிக்கப்பட்ட முதல் 24 மணி நேரத்தில் சுமார் 13 லட்சம் பேர் இணையதளம் வழியாக பதிவு செய்தனர். தமிழக அரசியலில் புதிய மாற்று அரசியல் தளத்தை உருவாக்கும் முயற்சியாக ‘We The Leaders’ இயக்கம் பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில், செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ‘We The Leaders’ அமைப்பின் முதல் மாநாடு ஜூலை 12-ஆம் தேதி பொள்ளாச்சியில் நடைபெறும் என்று தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் இயக்கத்தின் எதிர்கால செயல் திட்டங்கள், உறுப்பினர் விரிவாக்கம் மற்றும் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இருப்பினும், மாநாட்டின் முழு நிகழ்ச்சி நிரல் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

Related Post

Latest News