வாட்ஸ்-அப்பில் வந்த அழைப்பிதழ்., டவுன்லோட் செய்தவருக்கு ரூ.5 லட்சம் குளோஸ்

பெங்களூருவில் தொழிலதிபரிடம் புதிய முறையில் ஆன்லைன் மோசடி நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவை சேர்ந்த நூர் நஹீத் கான் என்ற தொழிலதிபருக்கு வாட்ஸ்-அப்பில் அறிமுகமில்லாத எண்ணில் இருந்து திருமண அழைப்பிதழ் குறுஞ்செய்தி வந்துள்ளது. “திருமண நிகழ்ச்சியின் முழு விவரங்களை காண இணைக்கப்பட்டுள்ள கோப்பை பதிவிறக்கம் செய்யுங்கள்” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க : தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு

இதனை உண்மையான அழைப்பிதழ் என நம்பிய அவர், அதில் இருந்த ஏபிகே (APK) கோப்பை செல்போனில் பதிவிறக்கம் செய்துள்ளார். அதன் பின்னர் அவரது மொபைலில் தானாகவே ஒரு செயலி நிறுவப்பட்டதாக கூறப்படுகிறது. சில நொடிகளில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.5 லட்சத்து 440 பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து அவர் போலீசிடம் புகார் அளித்தார். புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்ற மோசடிகளிடம் இருந்து தப்பிக்க தெரியாத நபர்களிடமிருந்து வரும் APK கோப்புகள் மற்றும் சந்தேகமான லிங்குகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என இணைய பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Post

Latest News