தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று ஒரே கட்டமாக நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்த தோ்தலில் மொத்தம் 84.51 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த 74 ஆண்டு கால தமிழக தோ்தல் வரலாற்றில், இதுவரை இல்லாத சாதனையாக இந்த வாக்குப் பதிவு நடந்துள்ளது.
திமுக தலைவர் மற்றும் முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் சென்னை கொளத்தூரில் போட்டியிட்டார். இம்முறை அந்தத் தொகுதியில் 83.58% வாக்குகள் பதிவாகியுள்ளன.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டார். இந்தத் தொகுதியில் 89.09% வாக்குகள் பதிவாகியுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டார். இங்கு 71.88% மட்டுமே வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். சென்னை பெரம்பூரில் 86.72% மற்றும் திருச்சி கிழக்கில் 79.32% வாக்குகள் பதிவாகியுள்ளது.


