முதல்வர் வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிகளின் நிலவரங்கள் என்ன?

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியதும், முதற்கட்ட எண்ணிக்கைகளில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அதிக தொகுதிகளில் முன்னிலை வகிப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

1 மணி நிலவரப்படி தவெக 107 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 62 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 65 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.

முதல்வர் வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிகளின் நிலவரங்கள்

விஜய் பெரம்பூர் தொகுதியில் 31,547 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியில் 18,038 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார்.

மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் 11,983 வாக்குகள் பெற்று பின்தங்கிய நிலையில் உள்ளார்.

சீமான் காரைக்குடி தொகுதியில் 2,975 வாக்குகளுடன் பின்தங்கியுள்ளார்.

Latest News