நாடு முழுவதும் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த இணையதளங்கள் முடக்கம்

நாடு முழுவதும் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 8,750 சூதாட்ட தளங்கள் மீது மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

கிரிக்கெட் போட்டிகளை மையமாகக் கொண்டு பல்வேறு இணையதளங்கள் மற்றும் செயலிகள் மூலம் சூதாட்டம் அதிகரித்ததாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. குறிப்பாக இந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளின்போது சட்டவிரோத சூதாட்ட இணையதளங்கள், செயலிகள் மூலம் பலர் சூதாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, நாடு முழுவதும் செயல்பட்டு வந்த 8,750 சட்டவிரோத சூதாட்ட இணையதளங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. இணையவழி மோசடிகள் மற்றும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Post

Latest News