நாமக்கல் நல்லிப்பாளையத்தில் EVM கோளாறால் வாக்குப்பதிவு ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டது. புதிய இயந்திரம் மாற்றிய பின் வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கியது.
தமிழக சட்டசபை தேர்தல் இன்று காலை 7 மணியில் இருந்து மாநிலம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாமக்கல் தொகுதிக்குட்பட்ட நல்லிப்பாளையம் வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டதால், வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
இது குறித்து உடனடியாக தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பழுதான இயந்திரத்தை மாற்றி புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு வரப்பட்டது. புதிய இயந்திரம் நிறுவப்பட்ட பிறகு வாக்குப்பதிவு மீண்டும் வழக்கமான முறையில் தொடங்கியது.


