தமிழகத்தின் 234 தொகுதிகளில், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை. ஆனால், இத்தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட தவெக 108 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஆட்சி அமைக்க தமிழக வெற்றிக் கழகம் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.
இந்த சூழலில், தவெக தலைவர் விஜய், கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று மதியம் 3.30 மணிக்கு தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்திக்க உள்ளார்.
பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தனிப்பெருங்கட்சி என்ற அடிப்படையில் ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


