நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. பின்னர் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் கடந்த 10ம் தேதி விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில். முதலமைச்சர் விஜய், வரும் 22ஆம் தேதி பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். தமிழக வளர்ச்சி திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு தொடர்பாக முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல், காங்கிரஸ் மூத்த தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரையும் விஜய் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தேசிய தலைவர்களுடன் விஜய் மேற்கொள்ளும் இந்த தொடர் சந்திப்புகள் அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
