த.வெ.க. தலைவர் விஜய் நேற்று தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை நேரில் சந்தித்து, தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது, பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை வழங்கினார். அதனை ஏற்றுக்கொண்ட பொறுப்பு ஆளுநர், த.வெ.க. தலைவர் விஜய் தலைமையிலான அரசு பதவியேற்க அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில். இன்று காலை 10 மணிக்கு, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. அதில், த.வெ.க. தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். அவருக்கு கவர்னர் அர்லேகர், பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.
அவருடன் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், அருண்ராஜ் உள்பட 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். வரும் 13-ந்தேதிக்குள் விஜய் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று மக்கள் மாளிகை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : புதிய அரசுக்கு மீண்டும் எனது வாழ்த்துக்கள் : மு.க ஸ்டாலின் பதிவு
த.வெ.க. தலைவர் விஜய் இன்று பதவியேற்க உள்ள நிலையில் பதவியேற்பு விழாவை நேரலையில் காண சென்னை மாநகராட்சி சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.
கீழ்காணும் 20 இடங்களில் எல்.இ.டி. மின்னணுத் தொலைக்காட்சிகள் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
அண்ணாநகர் டவர் பார்க்
மெரினா கடற்கரை
கோயம்பேடு சி.எம்.பி.டி
புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் ரெயில் நிலையம்
தி.நகர் பேருந்து நிலையம்
பெசன்ட் நகர் கடற்கரை
திருவான்மியூர் பேருந்து நிலையம்
கத்திபாரா நகர சதுக்கம்
செம்மொழிப் பூங்கா
தீவு திடல் பேருந்து நிறுத்தம்
நாகேஸ்வரராவ் பூங்கா
மயிலாப்பூர் டேங்க் ஏரியா
வடபழனி பேருந்து நிலையம்
எம்ஜிஆர் நகர் மார்க்கெட் பகுதி
சோழிங்கநல்லூர் சந்திப்பு
மாதவரம் பேருந்து நிலையம்
போரூர் சந்திப்பு
அம்பத்தூர் ஓ.டி. பேருந்து நிலையம்
தண்டையார்பேட்டை பஸ் டிப்போ பகுதி
அடையாறு டிப்போ சந்திப்பு
