தமிழக சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் அரசு 144 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற்று வெற்றி பெற்றது. எதிர்க்கட்சியின் வெளிநடப்புக்கிடையே தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்க வைத்தது.
தமிழக சட்டசபையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பெரும்பான்மையை நிரூபித்தது. இதில் தீர்மானத்திற்கு ஆதரவாக 144 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். எதிராக 22 பேர் வாக்களித்த நிலையில், 5 உறுப்பினர்கள் நடுநிலையாக இருந்தனர்.
வாக்கெடுப்பு நடைபெறும் நேரத்தில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இறுதியாக, பெரும்பான்மை வெற்றி பெற்றதால் விஜய் தலைமையிலான அரசு தொடர்ந்து ஆட்சியில் நீடிக்கும் என சபாநாயகர் அறிவித்தார்.
