தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்த தவெக ஆட்சியமைக்க உரிமை கோரியிருந்த நிலையில், 118 எம்.எல்.ஏ.க்கள் பெயர் பட்டியலை கொண்டு வந்தால்தான் ஆட்சி அமைக்க அனுமதிக்க முடியும் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இந்த சூழலில் தவெக அரசுக்கு காங்கிரஸ் ஏற்கனவே ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு அளித்தது.
இதனை தொடர்ந்து, தற்போது விடுதலை சிறுத்தை கட்சியும் தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தவெக வின் ஆதரவு 118 ஆக உயர்ந்துள்ளது. திருமாவளவனை நேரில் சந்தித்து ஆதரவு கடிதத்தை பெற்றார் ஆதவ் அர்ஜுனா.


