உத்தரபிரதேசம் மாநிலத்தில், கடந்த 24 மணி நேரமாக வீசிய கடும் புயல் மற்றும் மழையால் மாநிலம் முழுவதும் கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய சூறாவளி காற்றால் இதுவரை 104 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 52 பேர் காயமடைந்துள்ளனர். பலர் வீடுகளை இழந்துள்ளனர்.
இந்நிலையில், பரேலி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், பலத்த காற்றில் ஒரு டின் ஷெட்டைப் பிடித்துக்கொண்டிருந்த 50 வயதான நன்ஹே கான் என்ற நபர் திடீரென காற்றில் பறந்து சென்றது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
பல அடி உயரம் காற்றில் பறந்த அவர் பின்னர் தரையில் விழுந்ததில் கை மற்றும் காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் சிகிச்சைக்கு பின் நலமாக இருப்பதாக கூறப்படுகிறது.
