“கொடுத்ததெல்லாம் கொடுத்தார்”: பேரவையில் பாட்டு பாடி நன்றி தெரிவித்த தவெக எம்.எல்.ஏ.!

சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் உரையாற்றிய முதல்வர் விஜய், அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அரசு சார்பில் அதிகாரப்பூர்வ வாகனம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த புதிய திட்டத்தின் கீழ், வாகனப் பராமரிப்பு, ஓட்டுநர் ஊதியம் மற்றும் எரிபொருள் செலவுகளுக்காக மாதம் தோறும் ரூ.75,000 வாகனப் படியாக வழங்கப்படும். சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு உதவியாளர்களை நியமித்துக் கொள்ளும் வசதிக்காக மாதம் ரூ.25,000 நிதி வழங்கப்படும்.

இதையும் படிங்க : வட சென்னைக்கு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை : முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு

இதன் மூலம் மக்கள் பிரதிநிதிகள் தங்களின் தொகுதி ஆய்வுகளையும், பொதுமக்கள் குறைகேட்புப் பணிகளையும் மேலும் சுறுசுறுப்பாகவும் விரைவாகவும் மேற்கொள்ள முடியும்.

முதல்வர் விஜய்யின் இந்த அறிவிப்புக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஆதரவை தெரிவித்தனர். இதில், தவெக எம்.எல்.ஏ. சண்முகன், “அரசு சார்பில் வழங்கப்படவுள்ள வாகனங்களை ‘இனோவா’ (Innova) மாடல் காராக வழங்கினால் கிராமப்புறக் களப்பணிகளுக்கும் கடினமான சாலைப் பயணங்களுக்கும் மிகவும் சௌகரியமாக இருக்கும்” என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

இதையும் படிங்க : காலி மது பாட்டில்களை திரும்பப் பெற புதிய கருவி : சென்னையில் சோதனை..!

அவரைத் தொடர்ந்து பேசிய தவெக எம்.எல்.ஏ. சிந்து, இந்த அறிவிப்புக்காகத் தனது நெஞ்சார்ந்த நன்றியையும் மகிழ்ச்சியையும் சினிமாப் பாடல் வரிகள் மூலம் தெரிவித்தார். “கொடுத்ததெல்லாம் கொடுத்தார், இவர் யாருக்காகக் கொடுத்தார்? ஒருத்தருக்கா கொடுத்தார் இல்லை ஊருக்காகக் கொடுத்தார்” என பாட்டுப் பாடி புகழ்ந்து தனது ஆதரவை தெரிவித்தார்.

Related Post

Latest News