தவெக கட்சியின் ஊராட்சி மன்ற தலைவர் லஞ்சம் வாங்கியதாக வெளியான வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் வீராசாமி, ஒப்பந்ததாரர் ஒருவரிடம் தனது அலுவலகத்தில் பணம் பெற்றதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. அந்தக் காட்சிகள் வெளியாகியதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், வீராசாமியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
