செங்கல்பட்டு அருகே நடுவழியில் நின்ற ரயில்கள் : பயணிகள் கடும் அவதி!

செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே திடீரென மேற்கொள்ளப்பட்டு வரும் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக, தென் மாவட்டங்களில் இருந்து வரும் முக்கிய ரயில்கள் அனைத்தும் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

பராமரிப்பு பணிகளின் காரணமாக, சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த ரயில்கள் அனைத்தும் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக ஒரே இடத்தில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ரயில் எப்போது புறப்படும் என்று தெரியாமல் நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள், பொறுமையிழந்து ரயில்களில் இருந்து கீழே இறங்கினர். பேருந்துகள் மற்றும் பிற மாற்று வாகனங்கள் மூலம் தங்களது பயணத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

Related Post

Latest News