தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியதும், முதற்கட்ட எண்ணிக்கைகளில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அதிக தொகுதிகளில் முன்னிலை வகிப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதால் திமுகவுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் முக்கிய பங்கு வகித்த திமுக இந்த முறை ஆரம்ப கட்டத்தில் எதிர்பார்த்த அளவுக்கு முன்னேறாமல் இருப்பது கட்சியினருக்குள் கவலை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், வெற்றி பெற்ற த.வெ.க வேட்பாளர்களை பாதுகாக்க விஜய் பெரிய பிளான் போட்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள ஒரு தனியார் விடுதியை த.வெ.க-வினர் தயார் செய்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெற்றி பெறும் வேட்பாளர்களை அங்கு தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


