தவெக அரசுக்கு ஆதரவு அளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்த தவெக ஆட்சியமைக்க உரிமை கோரியிருந்த நிலையில், விஜய் நேற்று (07-05-2026) பதவியேற்பார் என்று தகவல்கள் பரவின.

118 எம்.எல்.ஏ.க்கள் பெயர் பட்டியலை கொண்டு வந்தால்தான் ஆட்சி அமைக்க அனுமதிக்க முடியும் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். இதனால் விஜய் முதல்-அமைச்சர் ஆவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தவெக அரசுக்கு ஆதரவு நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. ஏற்கனவே காங்கிரஸ் ஆதரவு அளித்த நிலையில் தற்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு அளித்துள்ளதால் தவெக வின் ஆதரவு 115 ஆக உயர்ந்துள்ளது.

தளி-ராமச்சந்திரன், திருத்துறைப்பூண்டி-மாரிமுத்து ஆகியோர் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிட்டு வென்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அளித்த ஆதரவு கடிதத்தை தவெகவின் நிர்மல்குமார் பெற்றுக்கொண்டார்.

Related Post

Latest News