தெலுங்கானா மாநிலத்தில் ரகுபதி என்ற நபர், பைக் வாங்குவதற்காக கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் 10 ரூபாய் நாணயங்களைச் சேமிக்கத் தொடங்கினர். 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்று வதந்திகள் பரவிய போதிலும், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் அவர் நாணயங்களை சேர்க்க தொடங்கினார்.
இந்நிலையில், ரகுபதி, ஹீரோ பைக் ஷோரூமிற்குச் சென்று ₹1.10 லட்சம் மதிப்புள்ள ‘ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ்’ பைக்கை வாங்க முடிவு செய்தார். ஆனால், அதற்குப் பணமாகத் தராமல், தான் செய்து வைத்திருந்த 10 ரூபாய் நாணயங்களை மூட்டையில் நிரப்பி ஷோரூமிற்குள் கொண்டு வந்து இறக்கினார்.
இதைக் கண்டு ஷோரூம் ஊழியர்களும், அங்கிருந்த வாடிக்கையாளர்களும் ஒரு நிமிடம் திகைத்துப் போயினர். இதையடுத்து, ஷோரூம்மில் உள்ள ஊழியர்கள், அந்த நாணய மூட்டைகளைப் பிரித்து, தரையில் கொட்டி, சுமார் 4 மணி நேரம் தொடர்ச்சியாக எண்ணி சரிபார்த்தனர். பின்பு, புதிய மோட்டார் சைக்கிளின் சாவியை ரகுபதியின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். இந்த நெகிழ்ச்சியான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
